வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? ஓட்டுப்போட 11 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்று போதும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஓட்டுப்போட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார், வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு உள்ளிட்ட 11 வகையான அடையாள அட்டைகளை எடுத்து சென்று வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு: தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும் புதிதாக வாக்களிக்க உள்ளவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இன்னமும் வழங்கப்படவில்லை. தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்காளர் சீட்டுடன் (Voters Slip) வாக்காளர் அடையாள அட்டை (Voter ID card-EPIC) அவசியம். தவிர்க்க முடியாத காரணத்தால் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வர இயலாத பட்சத்தில் 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை வாக்காளர் சீட்டுடன் சேர்த்து காண்பித்து வாக்குப்பதிவு செய்யலாம். இந்திய தேர்தல் ஆணையம் ...