Breaking News ⚡⚡+2 செய்முறைத்தேர்வு...மாதிரி வினாத்தாள் வெளியீடு⚡⚡
2020- 21ஆம் கல்வி ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நெருங்கும் சூழ்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி அன்று தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 2020-21ம் ஆண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3ம் தேதி தொடங்குகிறது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பாடங்களை வாரத்தில் ஆறு நாட்களும் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தலுக்கு பிறகு, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும் என்ற செய்தியை தொடர்ந்து தற்போது +2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தேதி வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 16-4-2021 முதல் 23-4-2021 வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன என அரசுத் தேர்வுகள் இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.
தற்போது +2 மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி செய்முறைத் தேர்விற்கான மாதிரி வினாத்தாள் வெளியாகி உள்ளது.
Comments
Post a Comment