இன்றைய செய்திகள்
இன்றைய செய்திகள்
20.10.2022( வியாழக்கிழமை)
🌹நாம் மற்றவரை புரிந்து கொள்ளும் அளவுக்கு நம்மை யாரும் புரிந்து கொள்வதில்லை என்பதே நிசப்தமான உண்மையாகும்.!
🌹🌹எவ்வளவு தான் மனதை காயப்படுத்தினாலும் ஒருவரை மறக்கவோ,வெறுக்கவோ முடியவில்லை என்றால் அது தான் உண்மையான அன்பு ஆகும்.!!
🌹🌹🌹பாசம் வைப்பது தவறல்ல அளவுக்கு மீறிய பாசம் வைப்பது தான் தவறாகும்.ஏனெனில்
அவர்களை மறக்கவும்
முடியாமல் விட்டு விலகவும் முடியாமல் அனுபவிக்கும் வேதனை நரகத்தை விட மேலானது ஆகும்.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌅🌅+2 பொதுத் தேர்வு மார்ச் 2023 - மாணவர்களது பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு. 🌅🌅தேர்வுகளில் கேட்கப்படும் வினாக்கள் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு பயனுள்ளதாக இல்லை : நீதிமன்றம் அதிரடி
🌅🌅தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்றும், தமிழ் கட்டாயப் பாடம் கிடையாது என்பதும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது
🌅🌅பள்ளிக் கல்வித் துறை - நிருவாக சீரமைப்பு அலுவலகப் பணியாளர்கள் பணிநிரவல் செய்து ஆணை வழங்கப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு பதிவறை எழுத்தர் பணியிடம் ஒதுக்கீடு செய்து திருத்திய ஆணை வெளியீடு
🌅🌅37000 அரசு பள்ளிகளுக்கும் நூலக புத்தகங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை ஏற்பாடு
🌅🌅அனைத்து அரசு அலுவலகங்களிலும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்க தலைமைச்செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அரசு மருத்துவமனையிலும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஓய்வறை அமைப்பது அவசியம் எனவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் தலைமைச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்
🌅🌅கல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு மாற்றியமைக்கப்பட்டது.
👉இனி கல்வி நிலையங்களில் நிகழும் மரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீசாரே விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கல்வித்துறை விசாரணைக்கு பின்னரே கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை நீதிபதி சதீஷ்குமார் மாற்றியமைத்தார்
🌅🌅பேருந்தில் பயணிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பொறுப்பு.
👉அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சுற்றறிக்கை.
👉மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டாம் என ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அறிவுறுத்த வேண்டும்.
👉அறிவுரைகளை மீறி மாணவர்கள் செயல்பட்டால், காவல் நிலையத்தில் அல்லது அவரச காவல் உதவி எண் 100-ஐ நாடலாம் - போக்குவரத்துக் கழகம்.
🌅🌅எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
சிறப்புபிரிவு கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நேரடியாகவும் பொது கலந்தாய்வு இணைய வழியாகவும் நடக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நேற்று நடைபெறற்றது. நாளை முதல் 25-ம் தேதி வரை இணைய வழியில் பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது.
🌅🌅தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ரூ.1,050 கோடியில் புதிதாக 7,200 வகுப்பறைகள் கட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
🌅🌅ஆதிதிராவிட நல பள்ளிகள்/விடுதிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்/பட்டதாரி காப்பாளர் நிலையிலான காலி பணியிடங்கள் -பதவி உயர்வு மூலம் நிரப்புதல் -Google meet வழியாக பதவி உயர்வு வழங்க அறிவுரைகள் சார்ந்து ஆதி திராவிட நல இயக்குநரின் கடிதம் வெளியீடு.
🌅🌅தமிழ்நாட்டில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட இல்லையா? ஆர்டிஐ தகவல் 🌅🌅தொழிற்கல்வி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 3 மாத தொடர் நீட்டிப்பு ஆணை பள்ளிக்கல்வித்துறை வெளியீடு
🌅🌅15 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
🌅🌅தமிழகத்தில் புதிதாக 7 திருக்கோயில்களில் ரோப் கார் வசதி விரைவில் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்
🌅🌅ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யூகத்தின் அடிப்படையிலானது. எதையும் சந்திக்க தயார்! – வி.கே.சசிகலா
🌅🌅தமிழ்நாட்டில் கழுகுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான மாநில அளவிலான குழுவை உருவாக்கி வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
🌅🌅மதத்திற்கும் அதிகாரத்திற்குமான முரண் குறித்து பேச வேண்டும் – சென்னை குறும்பட விழாவில் சு.வெங்கடேசன் எம்.பி பேச்சு. 🌅🌅எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இழிவான கருத்துகள், நேர்காணல்களை வெளியிடும் யூடியூப் சேனல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு*
👉மலிவான விளம்பரத்துக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் - நீதிபதி எச்சரிக்கை
🌅🌅அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் 83 ரூபாயாக சரிந்தது.
🌅🌅உலகை வழிநடத்துவதில் இந்தியா அடுத்த 10 ஆண்டுகளில் முக்கிய பங்கு வகிக்கும்
அமைச்சர் ஜெய்சங்கர். 🌅🌅தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய, சில அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது
👉தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய ஆட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை பொதுத்துறை மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது
👉வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினை சேர்ந்த 3 வருவாய் துறை அதிகாரிகள் மீது துறை ரீதியில் நடவடிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
🌅🌅சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.37,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,700க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.61.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
🌅🌅தொலைபேசி சேவைகள் வழங்குவதில் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.ஐ ரிலையன்ஸ் ஜியோ பின்னுக்கு தள்ளியது.
👉இந்திய தொலை தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் அறிக்கைபடி ஜியோ நிறுவனம் 7.35 லட்சம் சேவைகளை வழங்கியுள்ளது. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் 7.13 லட்சம் தொலைபேசி சேவைகளை வழங்கியுள்ளது.
🌅🌅நாட்டில் புதிய வகை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது
அதன் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை
🌅🌅தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு
🌅🌅 "முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மழையோ மழை என பெய்து வெள்ளம் ஓடி வருகிறது!"
அமைச்சர் துரைமுருகன்
🌅🌅ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் ரகுபதி.
👉ஆன்லைன் சூதாட்டத்தினால் கல்வி, தொழில் மற்றும் மாணவர்களின் நுண்ணறிவு பலம், படைப்பாற்றல்களும் பாதிப்புக்குள்ளாகிறது. சூதாட்டம், இணையவழி விளையாட்டுகள் இயற்கையில் அடிமையாக்கும் தன்மை கொண்டவை - சட்ட முன் வடிவு.
🌅🌅ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையில் நான் ஒருபோதும் தலையிட்டது கிடையாது'
ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கை குறித்து சசிகலா பதில் அறிக்கை
🌅🌅சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள குஜராத்தில் ₹15,670 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டி உள்ளார்.
🌅🌅2023 ஆசியக்கோப்பைத் தொடரில் விளையாட இந்தியா பாகிஸ்தான் செல்லவில்லை என்றால், அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்குபெறாது எனத் தகவல்.
🌅🌅எடப்பாடி பழனிசாமியின் துரோகங்களும் தவறுகளும், அவரது அரசியல் வாழ்க்கையை அறிந்த அனைவருக்கும் தெரியும்
- முதலமைச்சர் ஸ்டாலின்
🌅🌅தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான அனைவரும் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்
- வேல்முருகன்
🌅🌅காங்கிரஸ் கட்சியில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
🌅🌅அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி.
👉24 ஆண்டுகளுக்கு பின் காங். தலைவராக நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் தேர்வு.
👉கார்கே
கார்கே - 7897 வாக்குகளும் ,
சசி தரூர் - 1072 ,
செல்லாத வாக்குகள் - 416
🌅🌅மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
🌅🌅காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
Comments
Post a Comment