தமிழகத்தின் அரசு பள்ளிகளில் விடுமுறை நாட்களில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி

 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் இலவச நீட் பயிற்சி வார இறுதி நாட்களிலும், தேர்தல் விடுப்பு நாட்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2020- 21ஆம் கல்வி ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நெருங்கும் சூழ்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி அன்று தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.  மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. நீட் தேர்வில் கேள்விகள் அனைத்தும் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும். இதனால் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் பாதிப்படைய கூடாது என்ற நோக்கில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு 11ம் வகுப்பில் இருந்து நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வாரம் தோறும் நடத்தப்படும். 2020-21ம்  ஆண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 3ம் தேதி தொடங்குகிறது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் பாடங்களை வாரத்தில் ஆறு நாட்களும் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு சார்பில் வழங்கப்டும் இலவச நீட் பயிற்சியையும் வார விடுமுறை நாட்கள் மற்றும் தேர்தல் விடுப்பு நாட்களில் நடத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு நீட் தேர்வானது கணினி வழியில் நடைபெறாது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

NEET MOCK TEST